உள்நாடு

ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடிக்கு அருகில் ஓய்வு மற்றும் தொழுகை அறை..!

ஓட்டமாவடி மஜுமா நகர் மையவாடிக்கு அருகாமையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓய் வறையுடன் தொழுகை மேற்கொள்ள தொழுகையறை ஒன்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த பிரபல பரோபகாரி ஒருவரின் நிதி உதவியுடன் பல இலட்சம் ரூபாய் செலவில் இவை அமைக்கப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களும் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மரணித்தவர்களது குடும்பத்தினர்கள் கிழக்கு மாகாணத்திற்கு சுற்றுலா மேற்கொள்வோர் இந்த மஜ்மா நகர் மையவாடிக்கு வருகை தருகின்றனர். அவர்களின் ஓய்வு கருதியும் தொழுகையை மேற்கொள்ளவும் இவ்வாறு கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

அடர்ந்த காடுகள் வளர்ந்து காணப்பட்ட மஜ்மா நகர் மையவாடி இதே பரோபகாரி தனது செலவில் சுத்திகரித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(படங்கள் – பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *