2024 ன் தேசிய வெசாக் தினம் மாத்தளையில் அனுஷ்டிக்க அரசினால் ஏற்பாடு..!
இம்மாதம் 21 ம் திகதி முதல் 27 வரை நடைபெறவிருக்கும் நிகழ்வில் முதல்தினமன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உட்பட அதிகாரிகளும் மாத்தளைக்கு வரவுள்ளனர்
குறிப்பிட்ட தினங்களில் மாத்தளையில் பெரஹரா, தோரணங்கள் , தானசாலைகள் , உட்பட பெளத்த நிலையங்களில் சமய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன
இவர வெசாக் தினத்தை முன்னிட்டு இத்தினத்துக்கு பங்களிப்பு நல்கும் வகையிலும் இன நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கிலும் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்குதல், சிரமதானப் பணிகள் மரநடுகை , சகல இனத்தைச்சேர்ந்த வறுமைவயப்பட்ட மாணவர் மாணவியர்கள் 100 பேருக்கு கற்றல் உபகரணங்கள்
வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
(உக்குவளை ஜலீல்)