வெலிப்பன்ன ரஹ்மானியாவில் கமர் இல்லம் சம்பியன்..!
வெலிப்பன்னை ரஹ்மானிய்யா மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா அதிபர் முஹம்மத் நவ்மான் தலைமையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கமர்,சம்ஸ்,நஜூம் ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் இடம் பெற்றதோடு 329 புள்ளிகளை பெற்று கமர் இல்லம் 2024 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் இல்லமாக தெரிவானது.சம்ஸ் இல்லம் 328 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் மற்றும் நஜும் இல்லம் 268 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ரூமி ஹாஷிம் கல்வி மருந்தாக்கக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவருமான டாக்டர் அல்-ஹாஜ் எம்.எச்.எம்.ரூமி ஹாஷிம் பிரதம அதிதியாகவும் மகீஸா பவுண்டேஷன் இணைப்பாளர் தேசமான்ய அல்-ஹாஜ் அப்துல் காதர்,ரூமி ஹாஷிம் கல்வி நிலைய செயலாளர் அல்-ஹாஜ் ஜெஸுக் அஹமட்,முன்னாள் அதிபர் எம்.கௌஸுல் அமீர் உட்பட கல்வி அதிகாரிகள்,ஊர் பிரமுகர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கமர் இல்லத்தின் கெப்டன் எம்.எச்.எம்.ஸாதிக் செம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வெளிப்பன்னை ரஹ்மானியா முஸ்லிம் மகா வித்யாலயம் கல்வி,விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் கண்டுள்ள முன்னேற்றம் குறித்து அதிதிகள் இங்கு பெரிதும் பாராட்டினர்.
களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காக தன்னால் செய்ய முடியுமான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதம அதிதி டாக்டர் ரூமி ஹாஷிம் குறிப்பிட்டார்.
ரூமி ஹாசிம் கல்வி நிலையத்தினூடாக பாரிய கல்விப் பணிகளை மேற்கொள்ளும் அதன் ஸ்தாசகரையும் விழாவில் பங்கு பற்றிய அதிதிகள் பெரிதும் பாராட்டினர்.
மேற்படி கல்வி நிலையத்தினூடாக இப்படசாலையில் பிரத்தியேக இலவச வகுப்புகளும் இடம் பெறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பீ.எம்.முக்தார்)