பாராளுமன்றத்தை கலைத்தால் நாட்டில் ஸ்திரமற்ற நிலைமை ஏற்படும்..! -சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கைக்கு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.கட்சி ஏற்பாடு செய்திருந்த ரணவிரு பவ்ர கருத்தரங்கிலே பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷ பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென்கிறார்.பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் பாராளுமன்றம் கலைக்கப்படுமென தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால் நாம் அதனை எதிர்க்க மாட்டோம்.ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தை கலைத்தால் நாட்டின் பொருளாதார நெருக்கடி மும்முரமடையும்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் தேவைக்காக ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க கூடாது.அவ்வாறு செய்தால் நாடு வங்குரோத்து அடையும்.தேர்தல் நடந்தால் ஸ்திரமற்ற பாராளுமன்றம் தெரிவாகும் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.