ஆட்டோகைரோ விமானத்தைப் பயன்படுத்தி சுற்றுச் சூழல் வானிலை கண்காணிப்பை அறிமுகப்படுத்திய கத்தார்..!
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றக அமைச்சகம் நேற்று ஆட்டோகைரோ விமானத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் வானிலை கண்காணிப்பை அறிமுகப்படுத்தியது. மேலும் முதல் விமானம் உம் அல் ஷோகோட் விமானநிலையத்தில் இருந்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றக அமைச்சர் டாக்டர் அப்துல்லா பின் அப்துல்லாஜிஸ் பின் துர்கி அல் சுபை முன்னிலையில் ஆரம்பமகியது.
கத்தாரில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் உள்ள ஆட்டோஜிரோ விமானத்தின் முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் அமைச்சர் டாக்டர் அப்துல்லா பின் அப்துல்லாஜிஸ் பின் துர்கி அல் சுபை. இதன் போது அவர் கத்தார் நிலப்பரப்பின் பல பகுதிகளை பார்வையிட்டதுடன் அருகிலுள்ள கடற்கரைகளையும் ஆய்வு செய்தார்.
ஆட்டோகைரோ நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் திறன்கள் மற்றும் துல்லியமான சுற்றுச்சூழல் தகவல் மற்றும் தரவுகளை வழங்குவது தொடர்பாகவும் நாட்டின் கடல் கடற்கரைகளை கண்காணித்தல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆராய்ச்சிக்கு மற்றும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பின்தொடர்வது குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.
விமானம் வைத்திருக்கும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள், காட்டுச் சூழலில் ஏற்படும் இயற்கையான வளர்ச்சிகளை மிகத் துல்லியமாக அறிந்துகொள்வதில் பங்களிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
(கத்தார் முஸாதிக் முஜீப்)