உள்நாடு

முதலைகளின் நடமாட்டம் அம்பாறையில் அதிகரிப்பு..!

அம்பாறை மாவட்டத்தில்  சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில்  அதிகளவிலான முதலைகள்  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை பகுதி ,ஒலுவில் பகுதி ,நிந்தவூர் ,மருதமுனை, பெரியநீலாவணை ,நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு ,கிட்டங்கி, நாவிதன்வெளி, உள்ளிட்ட பகுதிகளை  அண்மித்த  ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால்  வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான  சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர்.
மேலும் இம்மாவட்டத்தில்   உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன.மேற்படி  பகுதிகளில் உள்ள  வாவிகள்  குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
 மேலும் தற்போது   சிறுபோக வேளாண்மை செய்கை   ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில்   நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடுஇ மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள்      முதலைகளினால் இரைக்குள்ளாகின்றது.  இப்பகுதியில்    இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.
 மேற்படி  பகுதிகளில்  முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன்  முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள்  எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதலை அபாயம் தெரியாமல்  இப்பகுதியில்  பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
(பாறுக் ஷிஹான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *