உள்நாடு

நீதி கோரும் டயனா. – 28இல் விசாரணை.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​டயானா கமகே சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, நீதிமன்றில் முன்னிலையாகி மனு தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதற்கு திகதி வழங்குமாறு கோரியிருந்தார்.

இதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி மனு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்டோர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *