உள்நாடு

வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா காலமானார்..!

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர்; மருதமுனையை சேர்ந்த கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா அவர்கள் இன்று (10.05.2024) தனது 59வது வயதில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் காலமானார்.

1964 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி மருதமுனை கிராமத்தில் பிறந்த இவர் 1984 ஆம் ஆண்டு ஆசிரியராக தனது கல்விச் சேவையை ஆரம்பித்தார். பின்னர் அதிபராக பதவி உயர்வு பெற்ற இவர், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் அதிபராக கடமையாற்றினார். பின்னர் இலங்கை கல்வி நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, முதல்தர கல்வி நிர்வாக அதிகாரியான இவர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் வலய கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி பின்னர் அங்கிருந்து சம்மாந்துறை வலயத்திற்கு இடமாற்றம் பெற்று தனது கல்விச் சேவையில் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று (10) காலமானார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், ஹோமியோபதி, ஆயுர்வேத வைத்தியத்தையும் கற்றுக் கொண்டார் அத்துறையிலும் மக்களுக்கு சேவையாற்றி வந்தார். அம்பாறை மாவட்ட வலது குறைந்தோருக்கான வலையமைப்பின் தலைவராகவும் இவர் சேவையாற்றினார்.
மருதமுனை பிரதேசத்திற்கும் பிராந்திய கல்வித்துறைக்கும் இவரது இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.

உமர் மௌலானா அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (10) இரவு 10.00 மணிக்கு மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு, மருதமுனை அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஊர் பிரமுகர்கள், கல்வியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *