உள்நாடு

டயனாவின் கையொப்பம் SJB இற்கு பாதிப்பாகாது. – முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.

இங்கிலாந்து பிரஜா உரிமை பெற்றதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளராக இருந்த டயனா கமகேயின் கையொப்பம் ஐக்கிய மக்கள் சக்தி இன் இருப்புக்கு பாதகம் ஆகாது என தேர்தல்கள் ஆணை குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி அதிகாரிகளின் பிரிஜா உரிமை தகவல்கள் குறித்து தேர்தல்கள் ஆணை குழு தேடாது அந்த அவசியம் ஆணைக்குழுவுக்கு இல்லை பிரஜா உரிமை தொடர்பில் ஒரு கட்சியை சட்டரீதியற்றதாக்கும் சட்டங்களும் இல்லை எனவும் அவர் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *