விளையாட்டு

2027 ஆசிய கிண்ண கால்பந்தாட்டம். தகுதிகாண் போட்டியில் கம்போடியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை.

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி கம்போடிய அணியை எதிர்த்து இரு போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்கான போட்டி அட்டவணையை இன்றைய தினம் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடருக்கு அணிகளை இணைப்பதற்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில் இலங்கை அணி கம்போடியா அணியுடன் 2 தகுதிகாண் போட்டியில் பங்கேற்கவுள்ளது. இதில் முதல் போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

2ஆவது போட்டி செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி கம்போடியாவில் இடம்பெறவுள்ளது.இவ்விரு போட்டிகளிலும் இலங்கை அணி பெரும்பாலும் வெற்றி பெற்று 2027ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடருக்கு தமது வருகையை உறுதிப் படுத்துவார்கள் என நம்பலாம். காரணம் இப்போதைய இலங்கை கால்ப்பந்தர்ட அணியைப் பொறுத்த வரையில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டு தொழில்முறை உதைப்பந்தாட்ட வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளமையை குறிப்பிடலாம்.

 

 

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *