உள்நாடு

தனாகம அஹதிய்யா பாடசாலையின் பரிசளிப்பு விழா..!

மாவனல்லை தனாகம அஹதிய்யா பாடசாலையின் கலாச்சார நிகழ்வுக்கான  பரிசளிப்பு நிகழ்வும் ,ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,மாவனல்லை இல்மா மண்டபத்தில் அதன் அதிபரும்,ஆயிஷா சித்தீக்கா கல்லூரி விரிவுரையாளருமான அஷ்சேக் எம். எஸ். எம். நியாஸ் கபூரி அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
  இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இஸட். ஏ.எம் .பைஸல் அவர்களும்,கௌரவ அதிதிகளாக கேகாலை மாவட்ட அஹதிய்யா சம்மேளன தலைவர் எம். ஜே.எம். அக்ரம் ஜுனைத் அவர்களும் அதன் செயலாளர் லியாஉர்ரஹ்மான் அவர்களும்,பங்குபற்றியதோடு,அத திகளாக தனாகம பாடசாலை அதிபர் பி.எல். நிஸா அவர்களும் இப்பகுதியின் பாடசாலை அதிபர்கள்,மற்றும் அஹதிய்யா பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,பள்ளி வாசல் தலைவர்கள் பெற்றோர்கள் , நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் நிகழ்வில் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றதோடு  அஹதிய்யா பாடசாலையில் நடைபெற்ற  போட்டி நிகழ்ச்சிகளில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதோடு கற்பித்த ஆசிரியர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
(பாரா தாஹீர் -மாவனல்லை  செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *