எம்.பீ ஆக இருந்து கொண்டு டயனா பெற்ற சம்பளம் வரப் பிரசாதங்களையும் திருப்பி செலுத்த வேண்டும்.. -இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழு கோரிக்கை..
இலங்கை பிரஜை அல்லாத டயானா கமக்கே சட்டவிரோதமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இதுவரை பெற்றுக் கொண்ட சம்பளங்களையும் வரப் பிரசாதங்களையும் மீளச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
கள்ளத்தனமாக பாராளுமன்றம் சென்ற இவர் இந்த நாட்டுப் பிரஜை அல்லாத ஒரே காரணத்திற்காக தான் இலங்கையின் பல்லின கலாசார விழுமியங்களுக்கு மாற்றமாக கஞ்சா உற்பத்தியை செய்ய வேண்டும்; ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை சட்டபூர்வமாக அனுமதிக்க வேண்டும்; மதுபான விற்பனைக்கான அனுமதி பத்திரங்களை பரவலாக்க வேண்டும் என்றெல்லாம் பலமுறை பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கையின் பிரஜையாக இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.
அப்படியாயின் இதுவரை இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பெற்றுக் கொண்ட சம்பளம் மற்றும் சலுகைகளுக்கு யார் பொறுப்பு…??
என்றும் இவ் ஆணைக்குழு கேள்வியெழுப்பியுள்ளது.