உள்நாடு

விவாகரத்து வழக்குக்கு லஞ்சம் பெற்ற காதி நீதிபதி விவகாரம்: முஸ்லீம் சமுதாயத்தின் அவதானத்திற்கு..! -சட்டத்தரணி திருமதி சரீனா அப்துல் அஸீஸ்

விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்றுக்கு சென்ற பெண்ணிடம்   லஞ்சம் பெற்ற புத்தளம் காதி நீதிபதி இலஞ்ச விசாரனை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே இவரது இச்செயற்பாடு காரணமாக சிறப்பாகப் பணிபுரியும் ஏனைய காதிநீதவான்களுக்கும் தலைகுணிவையேற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் முஸ்லீம் சமுதாயத்தின் அவதானத்திற்கு சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான திருமதி சரீனா அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து அவர் மேலும்  தெரிவிக்கையில் ;
நன்னடத்தை அற்ற காதி நீதவான்களை நியமிப்பதனூடாக “காதி முறைமை” தவறானது என்று நிரூபிக்க ஏதேனும் திட்டங்கள் திரை மறைவில்  உயர் மட்டத்தில் அரகேற்றப்படுகின்றதா..? என்ற எண்ணம் தோன்றுகிறது.
காதி நீதிபதி நியமனம் தொடர்பில் தகைமை அற்றவர்களை நியமிப்பதினூடாக ஏதேனும் சதி வலைகள் எம்மை நோக்கி பின்னப்படுகின்றதா  எனவும் எண்ணத் தோன்றுகிறது.
எமது சமூகத்தில் எழுப்பப்படும் முக்கியமான பின்வரும் கேள்விகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம்
நாம் கேட்க வேண்டியவர்களாக உள்ளோம்.
1. இந்த குறிப்பிட்ட  காதி நீதிபதியாக  நியமிக்கப்படவர் தகைமை அற்றவர் என்றும், அவரது நன்னடத்தை கேள்விக்குட்படுத்தப்பட்டு  பல விடயங்கள், புத்தளம் மாவட்ட மக்களால் அறிவிக்கப்பட்ட பின்னும்..!              இவர்  யாருடைய சிபாரிசில் நீதி சேவை ஆணை குழு இவரை தெரிவு செய்தது..?
2. சமூக வலை தளங்களில் மிகவும் மோசமான விடயங்கள் இவர் தொடர்பில் வெளி வந்து, அவரது நடத்தை பல விமர்சனங்கள் செய்யப்பட்ட  பின்னும்…!                             நீதி சேவை ஆணை குழுவால் இக்காதி நீதவான் எவ்வாறு நியமனம் செய்யப்பட்டது…?
3. புத்தளத்து முஸ்லீம் மக்களால்..! இவரது நன்னடத்தை குறித்து குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கபட்ட  பின்னும்..! அந்த விடயத்தை குறித்த அதிகாரிகள் ஏன் கவனத்தில் எடுக்க வில்லை..?
4. காதி நீதிபதியாக தெரிவு செய்யப்படும் நபர் “நன்நடத்தை உள்ளவராக இருக்க வேண்டும்” என்பது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் ஒரு முக்கிய தகைமை ஆகும்..!
இருந்தும் நியமனத்தை உறுதி செய்யும் பதவியில் இருக்கும் அதிகாரிகள் ஏன்..?
இந்த முக்கியமான தேவைப்பாட்டை கவனிக்காமல் அல்லது உதாசீனப்படுத்தி விட்டு, தகமை அற்ற இவரை இந்த பதவிக்கு நியமனம் செய்தார்கள்..?
5. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நியமனம் தொடர்பான முஸ்லிம் விவாக விவாகரத்து கட்டளை சட்டத்தின் “நன்னடத்தை உள்ளவராக இருக்க வேண்டும்”என்ற நிபாந்தனையை ஏன் சரியாக செயல்படுத்தவில்லை ..?
6. சர்ச்சைக்குரிய இவரை  காதி நீதிபதியாக நியமிக்கும் போது “நன்னடத்தை”என்ற விடயம்  ஏன்
நியமன அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டது …?
7 . நீதி சேவை ஆணை குழு அவர் குறித்த புகார்களை கவனிக்க தவறியதா..? அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், புகார் குறித்து அவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கு என்ன காரணம்..?
8. கடமைலியிருக்கும் அதிகாரிகள் அவசியமான நடவடிக்கைகளை உடன் எடுக்க தவறியுள்ளார்களா..?
9.  நீதி சேவை ஆணைக்குழுவில் காதி நீதிபதியின் நியமனம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் துறை சார் அனுபவமுள்ளவர்களால்,  இந்த  பதவியின் சமய ரீதியான முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளதா…?  அல்லது உதாசீனம் செய்யப்படுகின்றதா..?  என்பதை கண்டறிய
பொறுப்பு மிக்க அதிகாரிகள், முஸ்லீம் தலைமைத்துவம்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் முன்வர வேண்டும். எமது உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாத்து அவற்றில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, அதன் முழுமையான பயன்பாட்டை முஸ்லீம் மக்கள் அனுபவிக்க, ஒன்றிணைந்து செயல்படுவது இன்றியமையாதது.
யாரேனும் காதி நீதவான்கள் சட்டத்திற்கு முரணாக செயல்பட்டால் சமூகமாய் நங்கள் அவர்களை அவதானிப்போமானால் நிச்சயமாக எதிர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை இலகுவாக கண்டறியலாம்…!
அத்துடன் நீதமான ஒரு காதி நீதி மன்ற முறைமையை கட்டி எழுப்பலாம். அத்துடன் உண்மையான இறையச்சத்துடன் இந்த சேவையை நீதமாக செய்து வரும் காதி நீதவான்களின் கௌரவத்தையும் பாதுகாக்கலாம். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(ஏ.எம்.ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *