உள்நாடு

மலேஷியாவில் சர்வதேச மதத் தலைவர்கள் மாநாடு ஆரம்பம்.

மலேசியா கோலாலம்பூரில் சர்வதேச மதத் தலைவர்களின் மாநாடு நேற்று 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் 63 நாடுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இலங்கையில் இருந்து சென்றுள்ள அணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பலீல் தலைமையிலான சர்வமதக் குழு தலைமை தாங்குகிறது.

உலகெங்கிலும் உள்ள மதத் தலைவர்களிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் வேற்றுமைக்குள் ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராஹிம், முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான டாக்டர் முகமது அப்துல்கரீம் அல்-இசா மற்றும் செனட்டர் மாண்புமிகு டத்தோ ஆகியோரின் ஆதரவில் நடைபெறும் இந்நிகழ்வில் சேடியா டாக்டர். ஹாஜி முகமது நயிம் பின் ஹாஜி மொக்தார்இ பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்).

மக்காவை தளமாகக் கொண்ட உலக முஸ்லீம் லீக், ஜபதன் கெமாஜுவான் இஸ்லாம் என் கோலாலம்பூர் உடன் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியுள்ளனர். அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். ஸம் ஸம் அறக்கட்டளையின் தலைவர் அஷ்ஷெய்ஹ் யூசுப் முப்தி, சபாப் நிறுவனத்தின் இயக்குனர் மௌலவி தாஸிம் பௌத்த இந்து சமயப் பெரியர்ர்களும் இம் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

(இக்பால் அலி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *