Uncategorized

எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

கண்டி மாவட்டத்தில், தெல்தோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களை கல்லூரியின் அபிவிருத்தியின் பங்காளர்களாக மாற்றும் நோக்கில் மூன்றாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென் பந்துக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் மே மாதம் 23,24 மற்றும் 25ம் திகதிகளில் மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஒன்றிணைவோம் – பலம்பெறுவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறும் இந்த மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், ஊர் வாசிகள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்.

குறிப்பு:- மேலதிக தகவல்களுக்கு 0771909968 எனும் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளவும்.


(எஸ்.ஏ.எம். பவாஸ்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *