இந்திய கலாச்சார சங்கத்தினரின் முழு நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி.
இலங்கையில் உள்ள இந்திய கம்பனிகளின் உரிமையாளர்களும், இந்திய கலாச்சார சங்கத்தினரும் இணைந்து இந்திய உயர்ஸ்தாணிகர் ஸ்ரீ சந்தோஷ் சா தலைமையில் கொழும்பு பார்க் வீதியில் உள்ள கோல்ட் மைதானத்தில் முழு நாள் கிரிக்கட் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இப் போட்டியில் 10க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் கொண்ட கழகங்கள் விளையாடின. இறுதி சுற்றுக்கு தெரிவான அணிக்கும் 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது.
6 ஓவர் கொண்ட மென் பந்து கிரிக்கெட் போட்டியில் 6 வீரர்களைக் கொண்ட இந்திய டயஸ்போர அனி 109-2 விக்கட்டுக்களை இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 1996 ம் ஆண்டு அணியான அர்ஜுன ரனதுங்க மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரை கொண்ட அணி 110-1 என்ற ஓட்டத்தினைப் பெற்று வெற்றியீட்டியது. இவர்களுக்கான வெற்றிக் கிண்ணம் இந்திய உயர் ஸ்தாணிகர் அர்ஜூன ரனதுங்கவிடம் கையளித்தார்.
(அஷ்ரப் ஏ சமத்)