Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தின நிகழ்வு..!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணியின் ஸ்தாபகர் தினம் எதிர்வரும் வியாழக்கிழமை 09.05.2024 பி.ப.04. -06 மணி வரை கொழும்பு 7ல் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இம் முன்னணியின் முன்னாள் சபாநாயகர் காலம் சென்ற தேசமான்ய எம். ஏ பாக்கீர் மார்க்கார் அவர்களே ஸ்தாபித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எம். சுகைர், ஜனாதிபதி சட்டத்தரனி ,சாலிய பீரிஸ். மற்றும் கலாநிதி ரங்கா கலன்சூரிய ஆசிய பசுபிக் சர்வதேச மீடியா பிராந்திய ஆலோசகர் ஆகியோர்கள் உரையாற்றுவார்கள். இந் நிகழ்வினை ஜனாதிபதி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபா நெறிப்படுத்துவார்.

அத்துடன் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி கடந்த கால வரலாற்றை சிரேஸ்ட சட்டத்தரணி என்.எம். சஹிட் தெளிவுபடுத்துவார்.இந் நிகழ்வில் பங்கு பற்றுபவர்கள் முன்கூட்டியே அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் 0777359678 கை.தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ஆசனங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என ஷாம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

 

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *