“கல்வி யாழ்ப்பாணம்” இரண்டாவது அமர்வு இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில்…
ICFS (International Centre for Foreign Studies) சர்வதேச வெளிநாட்டு கற்கை மையம் ஏற்பாடு செய்துள்ள “கல்வி யாழ்ப்பாணம்” இரண்டாவது அமர்வு இம்மாதம் (மே) 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் யாழ் பொது நூலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு வடக்கு மாகாணத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து, ஜேர்மனி மற்றும் மால்டா ஆகிய நாடுகளில் உள்ள கல்வி தொடர்பான தெரிவுகளையும்,விருப்பங்களையும் ஆராய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் முயற்சியின் இரண்டாவது கட்டமாகும். “கல்வி யாழ்ப்பாணம்” நிகழ்ச்சித் திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், தலைநகர் மற்றும் கற்கை வசதிகளை கொண்ட பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புகளை, வடக்கு மாகாணத்திலுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுடன் பகிர்ந்து கொள்வதே பிரதான நோக்காமாக அமைவதுடன் இலங்கையர் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க ICFS எப்போதும் உறுதிபூண்டு செயலாற்றிவருகின்றமை குறிப்பிடக்கூடியதாகும்.
எங்களால் முதன்மை படுத்தப்படுகின்ற கற்கைகளுக்கான நாடுகள் பாரிய பணச் செலவுகளை ஏற்படுத்தாத ஒன்றாகவும், நிதி பங்களிப்புகள் சலுகை அடிப்படையில் வசதிகளை ஏற்படுத்தும் ஒன்றாகவும் அறிமுகப்படுத்துகின்றது. குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்கள், விண்ணப்ப தாரர்களின் வசதியினை கரு த்திற் கொள்வதுடன் இந்த சந்தர்ப்பம் ஒரு சொற்ப அளவிலேயே “கல்வி யாழ்ப்பாணம்” மூலம் நாங்கள் வழங்கும் சில தனித்துவமான வாய்ப்புகளாகும்.
இலங்கையில் தங்களுடைய குடும்பத்தை விட்டு வெளியேறத் திட்டமிடாத அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஆராய்ச்சிப் பட்டம் பெறுவதற்காக, அவர்கள் சார்ந்து நிற்கின்றவர்களுடன் (பராமரிப்பு ) இங்கிலாந்துக்குச் செல்லும் வாய்ப்பை நாங்கள் மேலும் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். அதை வேளை மால்டாவில் உயர்கல்விக்கான புதிய வாய்ப்பை” கல்வி யாழ்ப்பாணம்” திட்டத்தின் ஊடாக இணைத்துக் கொள்ளும் மற்றொரு சிறப்பம்சமாகும்.
மால்டாவில் கல்வி செயற்பாடுகள் யாதெனில் மிகக் குறைந்த,உத்தரவாதமான கல்விக் கட்டணத்தையும், ஷெங்கன் விசாவிற்கான அனுமதியினையும் வழங்குகிறது, இதன் மூலம் ஐரோப்பாவிற்குள் நீங்கள் தடம் பதிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. 2024 மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஜெட்விங் யாழ் ஹோட்டலில் “கல்வி யாழ்ப்பாணம் ‘ முதலாவது அமர்வு நடத்தப்பட்டது. இதன் போது பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான வாய்ப்புகளை விண்ணப்பதாரர்களுக்கு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையினரின் கோரிக்கைகளின் விளைவாக, அதில் கலந்து கொண்ட அனைவரின் விருப்பத்தேர்வுகளுடன் இரண்டாவது அமர்வை நடத்துவதில் ICFS பெரும் மகிழ்ச்சியடைகிறது. இதன் அடிப்படையில் இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில்” கல்வி யாழ்ப்பாணம் ” அமர்வு 02 இல் பங்கேற்க நீங்கள் அனைவரும் விருப்பம் கொண்டுள்ளீர்கள் என்பதை நாங்கள் பெரிதும் நம்புகிறோம்.