உள்நாடு

இலங்கை, சீன நட்புறவு சங்க ஏற்பாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள்..!

இலங்கை-சீனா கலாச்சார நட்புறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் பேருவளை பகுதியில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இலங்கை-சீன கலாச்சார நட்புறவச் சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சமூக சேவையாளருமான அல்-ஹாஜ் இபாம் ஹனபியின் வேண்டு கோளின் பெயரில் முதல் கட்டமாக 50 வரிய குடும்பங்களுக்கு சுமார் 7.500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பேருவளை சீனன்கோட்டை தர்கா வீதியில் உள்ள கிரவுன் சர்வதேச பாடசாலையில் நடை பெற்ற நிகழ்வில் வைத்து பகிர்ந்தஅளிக்கப்பட்டன.

மேற்படி சங்கத் தலைவர் இந்திரானந்த அபேசேகர,பிரதித் தலைவர் துனில் ஹெய்யன்துடுவ,உப தலைவர் நிசான்த்த விக்ரம சிங்க,தேசிய அமைப்பாளர் நந்தசேன மதவர ஆரச்சி,நிறைவேற்று குழு உறுப்பினர் அல்-ஹாஜ் இபாம் ஹனபி,கிரவுன் சர்வதேச பாடசாலை பணிப்பாளர் எம்.ஹிசாம்,சமூக சேவையாளர்களான அல்-ஹாஜ் இஸ்மத் ராஸிக்,எம்.ரஸ்மி ஹுஸைன் ஆகியோர் நிகழ்வில் பங்கு பெற்றினர்.

நிகழ்வில் தலைவர் இந்ரானந்த அபேசேகர பேசும் போது-இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிக நீண்ட வரலாற்றினைக் கொண்டதாகும்.இந்த உறவை மேலும் சக்தி பெற செய்யும் வகையில் தான் சீனா-இலங்கை கலாச்சார நட்புறவுச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இச் சங்கமானது நாட்டின் பல்வேறு பகுதி வாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக இன,மதம்,மொழி,பிரதேச வேறுபாடுகள் இன்றி பணி செய்து வருகிறது.குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இவ்வமைப்பானது உலர் உணவு பொதிகளை வழங்கும் ஓர் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. எமது அமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர் இபாம் ஹனபியின் வேண்டுகோளின் பேரில் இன்று பேருவளை பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படுகிறது.

இலங்கை-சீனா சமூக கலாசார நட்புறவுச் சங்கத்தின் (ASLCSOC) அர்ப்பணிப்பின் காரணமாக இரு நாடுகளுக்கு மிடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. நாட்டின் முன்னேற்றம் கருதி பாரிய வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வர்த்தக,கைத்தொழில்,பொருளாதாரம்,சமூக,கலாச்சாரம் உட்பட பல துறைகளிலும் பாரிய போற்றத் தக்க வளர்ச்சிக்காக இவ்வமைப்பு அன்று முதல் இன்று வரை அர்ப்பணிப்புடன் பங்களிப்புச் செய்துள்ளது என்றார்.

நிகழ்வு இறுதியில் பேருவளை பகுதி பாடசாலை மாணவர்களுக்கு சீன மொழி கற்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே வியாபார நடவடிக்கை வளர்ச்சி கண்டுள்ள நிலையில் வர்த்தகர்கள் சீன மொழியை கற்பதன் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்றும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *