9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணம். இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் தகுதி.
பங்களாதேஷில் இடம்பெறவுள்ள 9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணத் தொடருக்கு இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.
9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி தொடர்க்கம் 21ஆம் திகதி வரை பங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.அதற்கமைய சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் அணிகளின் தரப்படுத்தலில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகளான அஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்காளதேஷ் ஆகிய 8 அணிகள் ரி20 உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய தகுதி சுற்று போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஸ்காட்லாந்து, அயர்லாந்து, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதியில் அயர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அணியும், 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை வீழ்த்திய இலங்கை அணியும் இத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி இன்று இலங்கை நேரப்படி இரவு 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேலும் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இரு அணிகளும் 9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
( அரபாத் பஹர்தீன்)