இலங்கை கிரிக்கெட்டின் பிரதான அனுசரணையாளராக இந்தியாவின் அமூல் நிறுவனம்.
9ஆவது ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ அனுசரணையாளராக சர்வதேச இருப்பைக் கொண்ட முன்னணி இந்திய பால் உற்பத்தியாளரான அமூல் இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்த்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள 9ஆவது ஆடவர் ரி20 உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் பிரதான அனுசரணையாளராக இந்தியாவின் முன்னனி நிருவனமான அமூல் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா குறிப்பிகையில், ”இலங்கை கிரிக்கெட்டுடனான அமுலின் கூட்டாண்மை ஒரு சிறந்த நடவடிக்கையாகும், ஏனெனில் சர்வதேச விளையாட்டு வர்த்தக நாமத்துடன் இணைந்திருப்பது நிறுவனம் சந்தை வளர்ச்சியைப் பெறுவதற்கும் சர்வதேச பார்வையாளர்கள் மத்தியில் அதன் வர்த்தக நாமத் தெரிவுநிலையை மேலும் மேம்படுத்துவதற்கும் நிச்சயமாக உதவும்.” என்றார்.
அத்துன் அமூல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஜெயன் மேத்தா குறிப்பிடுகையில் ”அமுல் பால்வள மேம்பாட்டுக்கு ஒரு நிரூபிக்கப்பட்ட முன்மாதிரியாகும், மேலும் அவர்களின் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனுக்காக இலங்கையுடன் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறது. 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக்கிண்ணத்துடன் அமூல் இலங்கை அணியுடன் மிக சமீபத்தில் இணைந்துள்ளது, மேலும் இலங்கை கிரிக்கெட் அணியுடனான எங்கள் தொடர்பை மேலும் வலுப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம், மேலும் ரி20 உலகக்கிண்ணத்துக்;கு அவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
(அரபாத் பஹர்தீன்)