இன்று முதல் வெள்ளி வரை பாராளுமன்றம் கூடும்.
பாராளுமன்றம் இன்று 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மே மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), பராட்டே சட்டத்தை 2024 டிசம்பர் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.