உள்நாடு

தெஹிவளை – சர்வதேச தாதிய மருத்துவக் கல்லூரியின் உயர் டிப்ளோமாக்களுக்கான பட்டமளிப்பு விழா

தெஹிவளையில் இயங்கி வரும் ( INA Medical Campus ) சர்வதேச தாதிய மருத்துவக் கல்லூரியின் தாதிய, உளவியல், மருந்தக கற்கை நெறிகளுக்கான சான்றிதழ், டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமாக்களுக்கான மாபெரும் பட்டமளிப்பு விழா, (04) சனிக்கிழமை காலை, கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இக்கல்லூரியின் ஸ்தாபகரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரிமாஸா முனாப் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பு நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது, பணிப்பாளர் ரிமாஸா முனாப், நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார்.
அத்துடன் கல்லூரி மாணவிகளினால், தனது உயர் கல்வியின் வெற்றிக்குக் கைகொடுத்து, ஒரு சிறந்த வீரப் பெண்மணியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் பணிப்பாளர் ரிமாஸா முனாபுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.
இச்சிறப்பு நிகழ்வில், கௌரவ அதிதிகளாக பேராசிரியர் சந்திமா விஜயகுணவர்தன, அல் ஆலிமா மரீனா றிபாய், விசேட அதிதிகளாக சென்னை “நேசம் ஹெல்த் கெயா” பணிப்பாளர், K.S.M. YOUSUF, KDU இன் PROFESSOR prasanna premadasa, முன்னாள் தொழில் பயிற்சி மற்றும் திறன் வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹஸ்ஸான் அலால்தீன் மற்றும் International Council for virtual education பணிப்பாளர் இம்தியாஸ் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *