உள்நாடு

கஹட்டோவிட்ட HF விளையாட்டு கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி: சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட உடுகொட ஜின்னா அணி..!

கஹட்டோவிட்ட HF விளையாட்டு கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சாம்பியன் கிண்ணத்தை உடுகொட ஜின்னா அணி சுவீகரித்துக்கொண்டது.

நேற்றைய தினம் (06) கஹட்டோவிட்ட பொது மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கஹட்டோவிட்ட HF அணியினை வீழ்த்தி உடுகொட ஜின்னா அணி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கஹட்டோவிட்ட HF அணி நிர்ணயிக்கப்பட்ட 06 ஓவர்களில் 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உடுகொட ஜின்னா அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி இலக்கை தாண்டியது.

09 அணிகள் கலந்து கொண்ட இச்சுற்றுப் போட்டியில் தொடர் நாயகன் விருதை உடுகொட ஜின்னா அணியின் சிரேஷ்ட வீரர் உஸாமா பெற்றுக்கொண்டார்.

இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை உடுகொட ஜின்னா அணியின் முபஸ்ஸல், தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதை ஓகொடபொல மூன் ஸ்டார் அணியின் நுஸ்கி, தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் விருதை கஹட்டோவிட்ட HF அணியின் முஜீப் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அனுசரணையாளர்கள் :

SHAAHIDH COLOUR HOUSE
WELLAMPITIYA

CMB GOLD HOUSE

HF SPORTS CLUB

UNITED SPORTS CLUB (AFSAL)

 

(ரிஹ்மி ஹக்கீம்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *