இலட்சக்கணக்கான மக்கள் ஏகோபித்த குரலில் இந்த கொடிய ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றே கூறுகிறார்கள்.. -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி
(தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மே தினக் கூட்டம் – 2024)
தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கொண்டாடுகின்ற இறுதி மே தினக் கூட்டம் யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு மற்றும் மாத்தறையில் மிகவும் பெருமையுடன் நடாத்தப்படுகின்றது. அடுத்த வருடத்தின் மே தினம் கொண்டாடப்படுவது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழாகும். ஆயிரத்து எண்ணூற்றி எண்பத்தாறில் அமெரிக்காவின் ஹேமார்க்கற் சதுக்கத்தில் எட்டு மணித்தியால வேலை நாளைக்கோரி வெள்ளைக்கொடியேந்தி பேராட்டம் நடாத்திய நிராயுதபாணிகளான மக்களுக்கு எதிராக அடக்குமுறை பிரயோகிக்கப்பட்ட தினத்தை அடிப்படையாகக்கொண்டு உலகமக்கள் மேதினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆட்சியாளர்களும் இந்த தினத்தைக் கொண்டாடி பல்வேறு கூத்துக்களை நடாத்துகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சிக் கும்பல், ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சியுள்ள குழுவினர் மற்றும் மொட்டின் குழுவினருடன் மே தினத்தைக் கொண்டாடுகின்ற விதத்தை எண்களால் வெளிப்படுத்தினாலும் தேசிய மக்கள் சக்தியின் பலத்தை வெளிக்காட்டி திசைகாட்டியைச் சேர்ந்த எங்களுக்கு போட்டி நிலவுவது எம்மிடமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரணிலுடனோ சஜித்துடனோ வேறு எவருடனோ எமக்கு போட்டியில்லை. எமக்கு இருப்பது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு இந்த தாய்நாட்டை செல்வந்த நாடாக்குகின்ற மற்றும் அழகுபடுத்துகின்ற போட்டி மாத்திரமே.
யாழ்ப்பாணத்திற்கு, அநுராதபுரத்திற்கு, கொழும்பிற்கு மற்றும் மாத்தறைக்கு ஒன்றுதிரண்டுள்ள இலட்சக்கணக்கான மக்கள் ஏகோபித்த குரலில் கூறிநிற்பது இந்த ஊழில்மிக்க கொடிய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென்பதே. ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவிக்கின்ற மே தினக் கூட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி நடாத்துகின்றதாம். 1980 ஜூலை வேலைநிறுத்தத்தின்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஒரு இலட்சம்பேரை வீதியில் இறக்க ரணில் விக்கிரமசிங்க கையை உயர்த்தியதற்காகவா அவருக்கு நன்றி தெரிவிக்கப் போகிறார்கள்? அதைப்போலவே மத்திய வங்கியை கொள்ளையடித்தாலா? நேற்று இரவு எண்ணெய் விலையைக் குறைத்ததாக இன்று வீம்புவார்த்தை பேசுவதாலா? அதைப்போலவே பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கெசற் வெளியிட்டதாலா? ரணில் விக்கிரமசிங்க என்னதான் செய்தாலும் விரட்டியடிக்கப்படவேண்டிய ஓர் ஆட்சியாளனாக மாறிவிட்டார். மக்களை ஏமாற்றி அரிசி பங்கிட்டாலும் காணி உறுதிகளை வழங்கினாலும் மீண்டும் ஏமாறப்போவதில்லை என மக்கள் சபதம் செய்துவிட்டார்கள். தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி மக்கள் குவிந்துள்ளதால் ரணில் விக்கிரமசிங்க பயந்துள்ள அளவே அதன் மூலமாக வெளிக்காட்டப்படுகின்றது. இன்று திரட்டியதைப்போன்றே மென்மேலும் இலட்சக்கணக்கில் மக்களை ஒன்றுதிரட்டி இந்நாட்டில் மக்கள் நேயமுள்ள ஆட்சியைக் கட்டியெழுப்ப ஒருவர்போல் ஒருங்கிணைவோம்.
இன்னும் ஓரிரு வாரங்களில் சஜித்தின் ஆத்தல்களைப் பார்க்க இயலுமென்று ஒருசிலர் கூறுகிறார்கள். எனினும் இது ஆத்தல் எடுப்பதற்கான தருணமன்று. எழுபத்தாறு வருடங்களாக நாட்டை வங்குரோத்து அடையச் செய்வித்த அனைத்து ஆட்சியாளர்களையும் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் விரட்டியப்பதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. நாட்டையும் மக்களையும் மறுமலர்ச்சி யுகமொன்றுக்கு கொண்டுசெல்கின்ற காலகட்டத்தில் மக்கள் சக்தியை வழங்குகின்ற வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுடனும் உலகவாழ் மக்களுடனும் ஒன்றுசேர்ந்து நாங்களும் கொண்டாடுகிறோம். மே தினத்தைக் கொண்டாடுவதற்கான தார்மீக உரிமையைக் கொண்டுள்ள உழைக்கும் மக்கள், கமக்காரர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் அர்த்தமுள்ள நோக்கினைக் கொண்டதாக கொண்டாடுவதற்கான வாய்ப்பினை தேசிய மக்கள் சக்தி மாத்திரமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நாட்டை வெற்றிபெறச் செய்விக்கின்ற தீர்வினைக் கொண்டு வருகின்ற மே தினக் கூட்டத்தினால் புதிய பலத்தையும் ஊக்கத்தையும் பெற்று நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அணிதிரள்வோம்