கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸின் ஞாபகார்த்த நிகழ்வு.
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் இஸ்தாபகர் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீசின் ஞாபகார்த்த நிகழ்வு பேரவையின் தேசியத் தவர் இஹ்ஸான் ஹமீட் தலைமையில் அண்மையில் தெமடகொடயில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்றது.
இதன்போது பேரவையின் புதிய லாஞ்னை பொறிக்கப்பட்ட ரீ சேர்ட் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் ஞாபகார்த்த நினைவாக கேக் வெட்டி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. வரவேற்புரையை தேசியத் தலைவர் இஹ்ஸான் ஹமீட் வழங்கினார் ஏ.எம்.ஏ.அஸீஸ் தொடர்பான அறிமுக உரையை முன்னாள் தலைவர் காலித் எம் பாறுக் வழங்கினார்.
இந்நிகழ்வில் கலாநிதி அஸீசின் புதல்வர்களான அலி அஸீஸ், காலநிதி அஸீஸ் ஆகியோருடன் பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் ஆசிப் சுக்ரி பொருலாளர் உள்ளி;ட்ட உறுப்பினர்களும் மாவட்ட ரீதியிலான தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் முன்னாள் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பேரவையின் நிறுவுனரின் ஞாபகார்த்தமாக சுய தொழில் ஈடுபடும் தேவையுடைய ஒருவருக்கு நடமாடும் வியாபார வண்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது துஆ பிரார்த்தனையை மௌலவி முஜீப் நிகழ்த்தினார்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
