அல் – ஹுமைஸரா அஹதிய்யாப் பாடசாலையின் பரிசளிப்பு விழா..!
அல் – ஹுமைஸரா அஹதிய்யாப் பாடசாலையின் பரிசளிப்பு விழா கடந்த ஞாயிறு (28) ஜாபிர் ஹாஜியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது.
சீனன் கோட்டை பள்ளிச்சங்க தலைவர் முக்தார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் தலைவர் பதவியேற்பு, ரமழான் கேள்வி – பதில் திறந்த போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் ரமழான் ஆன்மீக பயிற்சி நெறியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் என்பன வழங்கப்பட்டதோடு, மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் பிரதம அதிதியாகவும், அமானா வங்கியின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.ஸி.எம் நுமைர் காஸிம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அபிவிருத்தி அதிகாரி முப்தி முர்ஸி ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் விஷேட அதிதிகளாக அஹதிய்யா மத்திய சம்மேளனத் தலைவர், கழுத்துறை மாவட்ட அஹதிய்யாக்களின் தலைவர் மற்றும் அமானா வங்கியின் பேருவளைக் கிளை முகாமையாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அல்-ஹுமைஸரா அஹதிய்யாவின் அதிபர் அஷ்ஷெய்க் ஸப்வான் ஆரிபின் வழிகாட்டுதலில் இடம்பெற்ற இந்நிகழ்வை அஹதிய்யா நிர்வாகத் தலைவர் கலீபதுஷ் ஷாதுலி அஷ்ஷெய்க் இஹ்ஸானுத் தீன் (நளீமி)யினது தலைமையிலான அஹதிய்யா நிர்வாகம் ஒழுங்கு செய்திருந்தது.
விழாவில் விஷேட உரையாற்றிய பிரதம அதிதி ஜாமிஆ நளீமிய்யாவின் முதல்வர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், பிள்ளைகள் மீதான பெற்றோரின் பணி, அஹதிய்யாக் கல்வியின் முக்கியத்துவம் என்பன குறித்து விளக்கமளித்தார்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)