உள்நாடு

சாய்ந்தமருதில் ஹாஜிகளின் தோழன் நூல் வெளியீட்டு விழா.

முல்தஸம் ஹஜ், உம்றா ட்ரவல்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் அல்-ஹாஜ். மௌலவி A.S.M. ஷம்சுத்தீன் (பஹ்ஜி, மதனி, SLEAS – I, ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களால் எழுதப்பட்ட “ஹாஜிகளின் தோழன்” எனும் நூலின் இரண்டாம் பதிப்பின் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் (மே 13) திங்கட்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது.

மேலும், இம்முறை முல்தஸம் நிறுவனத்தின் ஊடாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் ஹாஜிகளுக்கான ஹஜ் விளக்கவுரையும் அன்றைய தினம் இடம்பெறும் என முல்தஸம் நிறுவனத்தின் நிருவாக பணிப்பாளர் அல் – ஹாஜ் முகத்தஸி தெரிவித்தார்.

இந்த ஆண்டு முல்தஸம் ட்ரவல்ஸின் பிரதம வழிகாட்டியான அல் – ஹாஜ் மெளலவி MSM சுஹூருத்தீன் அவர்களின் தலைமையில் சிறந்த உலமாக்கள் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 60க்கு மேற்பட்ட ஹாஜிகள் முல்தஸம் நிறுவனத்துடன் இணைந்து புனித மக்கா நகருக்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *