அங்கவீனமுற்றவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொது சுகாதார வசதிகளை விரிவுபடுத்தல்.
பாராளுமன்றத்துக்கு வருகை தரும் அங்கவீனமுற்றவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வசதிகளை வழங்குவதை விரிவுபடுத்தும் வகையில் நவீனமயமாக்கப்பட்ட பொது சுகாதார வசதிகள் அண்மையில் பாராளுமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பாராளுமன்றக் குழுக்களில் பங்குபற்றுவதற்கு வருகைதருவோர், பாராளுமன்றத்துக்கு வருகைதரும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்களின் பங்கேற்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அதற்கு ஏற்ற வகையில் பொது சுகாதார வசதிகளை விருத்தி செய்யும் நோக்கில் 40 வருட பழைமையான சுகாதார வசதிகள் தொகுதி இவ்வாறு விரிவுபடுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
விசேடமாக பாராளுமன்றத்துக்கு வருகைதரும் அங்கவீனமுற்றவர்களின் வசதிகருதி சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் முன்னோடித்திட்டமாக இது செயற்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற இணைப்புப் பொறியியலாளர் திணைக்களத்தின் முன்முயற்சியில் இடம்பெற்ற இந்தத் திட்டத்துக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை இலங்கை கடற்படை நிர்மாணரீதியான பங்களிப்பை வழங்கியிருந்தது.
எதிர்கால திட்டங்கள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெறும் வகையில் விசேட கலந்துரையாடல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள், இந்த திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கிய கடற்படை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றின் அதிகாரிகளும் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.