சம்மாந்துறை மீடியா போரத்தினால் நடாத்தப்பட்ட ஊடகச் செயலமர்வு
சம்மாந்துறை மீடியா போரத்தின் ஏற்பாட்டில் “பத்திரிகை வடிவமைப்பும், நெறியாழ்கையும், தொலைக்காட்சி செய்தி தயாரித்தல் மற்றும் சமாதான ஊடகக் கோட்பாடுகள்” ஆகிய தலைப்புகளை மையப்படுத்திய செயலமர்வு சம்மாந்துறை சமாதான கற்கைகளுக்கான நியைத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
போரத்தின் தலைவரும், மூத்த ஊடகவியலாளருமான எம்.ஐ.பி. பௌசுதீன் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் வளவாளர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளர்களான யூ.எல்.எம். றியாஸ், கியாஸ் ஏ புஹாரி ஆகியோரும் சிறப்பு வளவாளராக பேராசிரியர் எஸ்.எல். றியாஸ் அவர்களும் கலந்துகொண்டு விரிவுரையாற்றினார்கள்.
குறித்த செயலமர்வில் சுமார் 20 பேர் பயனடைந்ததுடன், நிகழ்வின் இறுதியில் பெறுமதியான சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த செயலமர்வானது சம்மாந்துறை மீடியா போரத்தின் ஊடகக் கல்வி வளர்ச்சித் திட்டத்தின் கன்னி நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஜே.எம். ஹனீபா ஜே.பி., நிருவாகச் செயலாளர் எம்.எச்.எம். ஹாரிஸ் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான எம்.சி. அன்சார், எம்.எல். இஷ்ஹாக், சி.எம்.யூ. தாரிக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.