உள்நாடு

ஹஸ்மா பிரைடல் அகாடமியின் “Wonder Women சாதனை விருதுகள்” விழா!

வெல்லம்பிட்டி – மீதொடடமுல்ல ஹஸ்மா பிரைடல் அண்ட் அகாடமி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் ஏற்பாடு செய்த “Wonder Women சாதனை விருதுகள்” விழா கடந்த ஏப்ரல் 27, சனிக்கிழமை வெல்லம்பிட்டி பெவிலியன் கிராண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

அகாடமியின் பணிப்பாளர் திருமதி ஹஸ்மா மாலிக் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாக பிரபல நடிகை ஓஷதி ஹேவாமத்தும கலந்து கொண்டார்.

இதன்போது நிறுவனத்தில் பயிற்சியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டன. அழகுக் கலையில் நிபுணத்துவம் பெற்ற முதன்மையான நிறுவனமான இந் நிறுவனத்தில், கை அலங்காரக் கலை (Hrnna), கேக் தயாரித்தல், சமையல் மற்றும் இன்னும் பல விதமான அழகுக் கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றமை சிறப்பமாசமாகும்.

ஆர்வமுள்ள அழகுக் கலைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டிப்ளோமா திட்டங்களையும் முன்னனியில் நின்று வழங்குகின்றது. அத்துடன், பல்வேறு வகைகளில் 100க்கும் மேற்பட்ட விருதுகளையும் இந் நிறுவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பிரபல நடிகை ஓஷதி புத்திம ஹேவாமத்தும ஆகியோருக்கு ஏற்பாட்டாளர்களினால் நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *