உள்நாடு

நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு..!

புதுடில்லியிலுள்ள நோர்வே தூதுவர் திருமதி May-Elin Stener தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (02) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் திரு. John Bjerkem தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் பங்கேற்றனர்.

இன்றளவில் இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை இருதரப்பினரதும் நீண்ட உரையாடலுக்கு இலக்காகியது. தேசிய சிக்கலின் நிகழ்கால வளர்ச்சிப்போக்குகள் பற்றியும் இவ்வருடத்தில் நடாத்தப்படவுள்ள தேர்தல்கள் பற்றியும் கவனஞ் செலுத்தப்பட்டது. நோர்வே அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் பற்றியும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் இத்தடவை இலங்கைக்கு வந்தபின்னர் மேற்கொள்ளப்படுகின்ற முதலாவது சந்திப்பு எனவும் நோர்வே தூதுவர் சுட்டிக்காட்டினார்.

 

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *