உள்நாடு

O+ சிறு நீரகம் தேவை..!

பேருவளை சீனன் கோட்டை தர்கா வீதி இலக்கம் 84/1 ஏ முகவரியில் வசிக்கும் எஸ்.எஸ்.யு‌.ஹலீமா சிறுநீரக நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு வாரத்திற்கும் மூன்று முறை இரத்த மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந் நிலையில் இவரை பரிசோதனை மேற்கொண்ட கொழும்பு லங்கா ஹோஸ்பிட்டல்ஸ் தனியார் வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஸுர்ஜித் சோமையா இவருக்கு மிக அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.

42 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரான இப் பெண்ணுக்கு o+ சிறுநீரகம் ஒன்று அவசரமாக தேவைப்படுகிறது எனவே இவரின் உயிரை பாதுகாக்கும் நோக்கில் சிறுநீரகம் தானம் செய்ய விரும்புபவர்கள் 0755662032 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவரது கணவர் கேட்டுள்ளார்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *