Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விஜயம்.

சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக சவூதி அரேபியா சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று (30) ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு சென்றுள்ளார்.

இலங்கை தூதுவர் பீ.எம் ஹம்ஸாவின் வேண்டுகோளையடுத்து அங்கு வருகை தந்த அமைச்சருக்கு தூதரக அதிகாரிகளும், ஊழியர்களும் அன்பான வரவேற்பளித்தனர்.தூதுவர் ஹம்ஸா தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *