விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணம். ரஷீத் கான் தலைமையில் ஆப்கான் அணி அறிவிப்பு.

எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆண்கள் ரி20 உலகக்கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட ரஷீத் கான் தலைமையிலான அணியை ஆப்கானிஸ்தான் அணி அறிவித்துள்ளது.

2022 இல் இடம்பெற்ற 8ஆவது ரி20 உலகக்கிண்ண தொடருடன் ஒப்பிடும்போது ஆப்கானிஸ்தான் அணியில் அதிகமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இளம் வீரர்களான கரீம் ஜனத், முகமது இஷாக் மற்றும் நூர் அகமது ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் அயர்லாந்துக்கு எதிராக தொடரிஐஅங ஆப்கானிஸ்தான் அணிக்காக சர்வதேச அறிமுகம் பெற்ற இளம் சுழல்பந்து வீச்சாளரான நங்யால் கரோட்டியும் அணியில் இடம் பிடித்துள்ளார். 20 வயதான அவர் அந்த தொடரில் வெறும் 5.90 என்ற ஓட்ட சராசரியுடன் மூன்று போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அத்துடன் சுழல்பந்து வீழ்ச்சிக்கு பெயர்போன முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நங்யால் கரோட்டி மற்றும் அனுபவமிக்க வீரரான முகமது நபி ஆகியோரின் ஆதரவுடன் அணித்தலைவரான ரஷீத் கான் சுழல் படையை வழிநடத்தவுள்ளார்.

நவீன்-உல்-ஹக், பரீத் அகமது மற்றும் பைசல் ஹக் பாரூக்கி ஆகியோர் வேகப்பந்து வீச்சில் அசத்தவுள்ளனர். சகலதுறையில் ஒமர் ஷாய், குல்படின் நைப் ஆகியோருடன் துடுப்பாட்ட வீரர்களாக குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் மற்றும் நஜீபுல்லாஹ் சத்ரான் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை அணியின் பலத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ்
இப்ராஹிம் சத்ரான்
அஸ்மத்துல்லா உமர்சாய்
நஜிபுல்லா ஜத்ரான்
முகமது இஷாக்
முகமது நபி
குல்பாடின் நைப்
கரீம் ஜனத்
ரஷித் கான்
நங்யால் கரோட்டி
முஜீப் உர் ரஹ்மான்
நோவின் உர் ரஹ்மான்
ஹக் பைசல் ஹக் பாரூக்கி
பரீத் அகமது மாலிக்

மேலதிக வீரர்கள்:

செடிக் அடல் ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய்
சலீம் சஃபி

 

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *