9ஆவது ரி20 உலகக்கிண்ணம். கழட்டி விடப்பட்டார் ஸ்மித். ஆஸி அணி அறிவிப்பு.
9ஆவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடருக்கான மிச்சல் மார்ஷ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வணியில் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரரான ஸ்டீபன் ஸ்மித்திற்கு இடம்வழங்கப்படவில்லை.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்க நாடுகளில் இடம்பெறவுள்ள 9ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடருக்கான அணிகளின் 15 வீரர்கள் கொண்ட குழாத்தினை இன்றை தினத்துக்குள் அறிவிக்கும் படி ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நியூஸிலாந்து அணி அறிவித்திருக்க, நேற்றைய தினம் தென்னாபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அனிகள் தமது 15 வீரர்கள் கொண்ட குழாத்தினை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் அவுஸ்திரேலிய அணி தமது 15 வீரர்கள் கொண்ட குழாத்தினை வெளியிட்டுள்ளது. இதன்படி அணியின் தலைவரான சகலதுறை வீரரான மிச்சல் மார்ஷ் பெயரிடப்பட்டுள்ளார். இருப்பினும் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரரான ஸ்டீபன் ஸ்மித் இக் குழாத்தில் இடம் பெறவில்லை. அத்துடன் இந்தியன் ப்ரீமியர் லக் தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக ஆரம்ப வீரராய் அதிரடியில் மிரட்டும் ஜேக் ப்ரேசர் மெக்குர்க் உலகக்கிண்ணத் தொடரில் சர்வதேச அறிமுகம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவரும் இவ் அணியில் இடம்பெறவில்லை.
இருப்பினும் அறிவிக்கப்பட்டுள்ள அணியின் துடுப்பாட்ட வீரர்களாக ஐ.பி.எல் தொடரில் அசத்திவரும் டிராவிஸ் ஹெட், டிம் டேவிட்டேவி; வேர்னர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். மேலும் சகலதுறை வீரர்களான மிச்சல் மார்ஷ் உடன் கெமரூன் கிறீன், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் , கிளேன் மெக்ஸ்வெல் மற்றும் ஆஷ்டன் ஆகர் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
மேலும் விக்கெட் காப்புத் துடுப்பாட்ட வீரர்களாக ஜோஷ் இங்லிஸ் மற்றும் மத்யூவ் வேட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக மிச்சல் ஸ்டார்க், பெட் கமின்ஸ், ஹெசில்வூட் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இத் தொடரின் அவுஸ்திரேலிய அணியின் சுழல்பந்து வீச்சாளர்களாக ஆடம் சம்பா இணைக்கப்பட்டுள்ளார். மிகச் சிறந்த 15 வீரர்கள் கொண்ட குழாத்தினை அறிவித்துள்ள அவுஸ்திரேலிய அணி இம் முறை சம்பியன் மகுடத்தை தன் நாட்டுக்கு எடுத்து செல்லும் கனவுடன் களம் காணவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய குழாம்.
மிட்செல் மார்ஷ்
ஆஷ்டன் அகர்
பாட் கம்மின்ஸ்
டிம் டேவிட்
நாதன் எல்லிஸ்
கேமரூன் கிரீன்
ஜோஷ் ஹேசில்வுட்
டிராவிஸ் ஹெட்
ஜோஷ் இங்கிலிஸ்
கிளென் மேக்ஸ்வெல்
மிட்செல் ஸ்டார்க்
மார்கஸ் ஸ்டோனிஸ்
மேத்யூ வேட்
டேவிட் வார்னர்
ஆடம் சம்பா
(அரபாத் பஹர்தீன்)