30 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீதி திறந்து வைப்பு.
அக்குறணை பிரதேச சபையினால் அக்குறணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காசாவத்தை கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் அமைந்துள்ள அசானா வீதியினை கொங்கிரட் வீதியாக நிர்மாணித்து மக்களின் பாவனைக்காக திறந்து உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்த வீதியின் மூலம் இப்பிரதேச மக்கள் பெரும் பயனை அடையவுள்ளனர்.
(இக்பால் அலி)