பேருவளை அப்ரார் கல்வி அபிவிருத்தி நிலையத்தின் விஷேட கூட்டம்.
பேருவளை அப்ரார் கல்வி அபிவிருத்தி நிலையத்தின் விசேட கூட்டம் மருதானை அரப் வீதியில் உள்ள எம்.நிஸாம் ஹாஜியாரின் இல்லத்தில் நடைபெற்றது.
பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மிகவும் வறிய மாணவர்களுக்கு கல்வியை செவ்வனே முன்னெடுக்க இவ்வமைப்பு 10 வருடங்களுக்கு மேலாக புலமைப் பரிசில்களை வழங்கி வருகிறது.
எதிர் காலத்திலும் மேலும் வரிய மாணவர்களுக்கு புலமை பரிசலில்களைப் பெற்றுக் கொடுப்பது அதற்காக தனவந்தவர்கள்,பரோபகாரிகளின் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளரும் அமைப்பின் முன்னாள் தலைவருமான அல்-ஹாஜ் ஏ.டப்ளியு.எம்.அஜ்வாத்,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொருலாளரும் இவ் அமைப்பின் செயலாளருமான கலாநிதி மௌலவி அல்-ஹாஜ் அஸ்வர் அஸாஹிம் (அல்-அஸ்ஹரி) தர்கா நகர் அழுத்கம வீதிய முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை அதிபர் பி.எம்.எம்.ஜாபிர் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர்.
அப்ரார் கல்வி நிலைய ஸ்தாபகர் பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சி முன்னேற்றம் குறித்து உரையாற்றினார். அஹதியா பாடசாலைகள் இயங்காத முஸ்லிம் பாடசாலைகளில் புதிதாக அகதியா வகுப்புக்களை ஆரம்பிப்பதன் அவசியம் குறித்து களுத்துறை மாவட்ட அகதியா சம்மேளன தலைவர் எம்.எச்.எம்.உவைன் ஹாஜியார் வலியுறுத்தினார்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)