Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

‘தமிழ் விதை’ முன்பள்ளி பாட நூல் வெளியீடு.

Future Leader’s முன் பள்ளியில் தமிழ் மொழி மாணவர்களுக்காக ‘தமிழ் விதை’ பாட நூல், முதன் முதலாக பாடசாலை அதிபர் லைலா அக்ஷியாவினால், நேற்று (30/04/2024) செவ்வாய்க்கிழமை, ஹொரேதுடுவை – முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன்போது, வித்தியாலய அதிபர் எஸ்.எச். முத்தலிப் கரங்களால், மாணவர்களில் சிலர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். இச்சிறப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில், முன்பள்ளி அதிபர் லைலா அக்ஷியா, துணையாசிரியர் நஸ்ரா பானு உள்ளிட்ட பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த நூல், தரம் ஒன்றுக்காக மாணவர்களைத் தயார் படுத்தும் நோக்கில், தமிழ் மொழியைப் படிப்படியாகவும் இலகுவாகவும் கற்கும் வகையில், சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *