உள்நாடு

கற்பிட்டியில் 1346 கிலோ பீடி இலைகளுடன் நான்கு நபர்கள் கைது..! பெறுமதி 70 இலட்சம் ரூபா..!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 1346 கிலோ பீடி இலைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர் .

கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவர்களிடமிருந்து சுமார் 70 இலட்சம் பெறுமதியான 42 பொதிகளில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகள் இவற்றைக் கடல் மார்க்கமாக ஏற்றிச் சென்ற படகு, தரைவழி போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய சாரதி , கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன், ஜனசவிபுர பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் ஆகியோர் கைதானவர்களில் அடங்குவர்.

காலம் காலமாக இந்தியாவிலிருந்து கற்பிட்டி கடல் வழியாகப் பீடி இலைகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதன் காரணமாக ஆண்டுக்கு கோடிக்கணக்கான சுங்க வரிகளை நாடு இழக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

 

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *