தர்காநகர் ரூமி ஹாசிம் கல்வி நிலையத்தின் விஞ்ஞானப் பிரிவு பகுதி நேர வகுப்பு ஆரம்பம்..!
கல்விக்கு கை கொடுப்போம் என்ற திட்டத்தின் கீழ், தர்கா நகர் ரூமி ஹாசிம் கல்வி நிலையத்தின் தர்கா நகர் (டிஎஸ்பி) விஞ்ஞானப்பிரிவு பகுதிநேர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்து வரும் அளப்பெரிய சேவைகளில் ஒன்றான தரம் 9, 10, 11, மாணவச் செல்வங்களுக்கான மேலதிக வகுப்புகளை விரிவாக்கம் செய்து, அத்தோடு க.பொ.தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்நோக்கும் மாணாக்களுக்கு கருத்தரங்குகள், செயலமர்வுகள், தரம் ஐந்து மாணவச் செல்வங்களின் புலமைப் பரிசில் பரீட்சைக்க்கான கருத்தரங்குகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், தர்கா நகர், பேருவளை மருதானை, வெளிப்பென்னை,
மக்கொனைப் பிரதேச பாடசாலைகளில் செயல்படுத்தி வரும் திட்டத்தின் கீழ் பேருவளை, மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் பாடசாலை அதிபர் திரு. குமார் அவர்களின் தலைமையில் தரம் 10, 11 மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை, அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் முகாமையாளரும், தர்கா நகர் ரூமி ஹாசிம் கல்வி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவருமான, கலாநிதி அல்ஹாஜ் ரூமி ஹாசிம் அவர்களின் முழுமையான ஒத்துழைப்போடு, அப் பாடசாலையின் வேண்டுகோளுக்கினங்க பகுதிநேர வகுப்புகள் ஆரம்பம் செய்து வைக்கப்பட்டன. பெற்றோர்கள், ஊர் நலன் விரும்பிகள், புத்திஜீவிகள், மாணவச் செல்வங்கள், பாடசாலை பழைய மாண சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மற்றும் ரூமி ஹாசிம் கல்வி நிலையத்தின் செயலாளரும், பைன் கெயார் பாமஸூட்டிக்கல் முகாமைத்துவப் பணிப்பாளருமான அல்ஹாஜ் ஜஸூக் அஹமட், ஒருங்கிணைப்பாளர் ரபீஸ் ஹம்ஸா ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.
(பேருவளை பீ.எம். முக்தார்)