9ஆவது ரி20 உலகக்கிண்ணம். மார்க்ரம் தலைமையிலான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு
9ஆவது ரி20 கிரிக்கெட் உலகக்கிண்ண தொடருக்கான எய்டன் மார்க்ரம் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட தமது அணியை இன்று அறிவித்தது தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள 9ஆவது ரி20 உலகக்கிண்ண தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இத் தொடருக்கான தமது 15 வீரர்கள் கொண்ட அணியை நாளைய தினத்துக்குள் 20 அணிகளும் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்திருந்தது. அந்தவகையில் நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி முதல் அணியாக தமது 15 வீரர்கள் கொண் குழாத்தை அறிவித்திருந்தது.
இந்நிலையில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை இன்றைய தினம் தமது 15 வீரர்கள் கொண்ட குழாத்தினை அறிவித்துள்ளது. இவ் அணியினை துடுப்பாட்ட சகலதுறை வீரரான எய்டன் மார்க்ரம் வழிநடாத்துகின்றார். மேலும் துடுப்பாட்ட வீரர்களான அதிரடி வீரர்களான ரீஸா ஹென்றிக் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர்களான நால்வர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குவய்டன் டி கொக், ஹென்றிச் க்ளாஸன் , அறிமுக வீரர்களான ரிக்கில்டொன் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள அணியில் சகலதுறை வீரரான மார்க்கோ ஜென்ஸன் உள்வாங்கப்பட்டுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களாக அனுபவமிக்க வீரர்களான ரபாடா, நோர்ட்ஜே, ஆகியோருடன் இளம் வீரர்களான கோட்ஸே, பார்ட்மென் மற்றும் போர்ட்டுய்ன் ஆகியோரும் சுழற்பந்து வரிசையை பலப்படுத்த கேஷவ் மஹராஸ் மற்றும் ஸம்ஷி ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர். இhத் தொடரின் மேலதீக வீரர்களான வேகப்பந்து வீச்சாளர்களான இங்கிடி மற்றும் பெர்கர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)