9ஆவது ரி20 உலகக்கிண்ணம். கோஹ்லி, துபே மற்றும் சம்சுன் அடங்களான இந்தியக் குழாம் அறிவிப்பு
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள 9ஆவது ரி20 கிரிக்கெட் உலகக்கிண்ண தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட தமது அணியை இன்று அறிவித்தது இந்திய கிரிக்கெட் சபை.
9ஆவது ரி20 உலகக்கிண்ண தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இத் தொடருக்கான தமது 15 வீரர்கள் கொண்ட அணியை நாளைய தினத்துக்குள் 20 அணிகளும் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்திருந்தது. அந்தவகையில் நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி முதல் அணியாக தமது 15 வீரர்கள் கொண் குழாத்தை அறிவித்திருக்க, இன்றைய தினம் தென்னாபிரிக்க அணியும் தமது அணியை அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இடம்பெற்றுவரும் நிலையில் இந்திய 15 வீரர்கள் கொண்ட உலகக்கிண்ண குழாத்தில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப்போகிறார்கள் என கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்திருக்க இன்றைய தினம் அதற்கான பதிலை வழங்கியிருக்கிறது இந்திய கிரிக்கெட் சபை. இன்று அறிவிக்கப்பட்டுள்ள 15 வீரர்கள் கொண் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தொடர்ந்தும் அணியின் தலைவரான செயற்படவுள்ளார்.
மேலும் சகலதுறை வீரரான ஹார்த்திக் பான்டியா உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள அணியில் துடுப்பாட்ட வீரர்களாக நடப்பாண்டின் ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் அதிக ஓட்டங்களைக் குவித்துள்ள விராட் கோஹ்லி, ஆரம்ப இடதுகைத் துடுப்பாட்ட வீரரான ஜாய்ஸ்வால், மத்திய வரிசை அதிரடித் துடுப்பாட்ட வீரரான சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளர்.
மேலும் விக்கெட் காப்புத் துடுப்பாட்ட வீரர்களாக விபத்தில் காயமடைந்து சுமார் ஒரு வருடங்களாக சர்வதேச போட்டிகளிலிருந்து விலகியிருந்த ரிஷப் பாண்ட் மற்றும் தேசிய அணியில் இடம் வழங்கப்படாமல் இருந்த சஞ்செய் சம்சுன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள அணியின் சகலதுறை வீரர்களான ஹர்திக் பான்டியாவுடன் சுழற்பந்து சகலதுறை வீரர்களான ரவீந்திர ஜடோஜா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலும்அறிவிக்கப்பட்டுள்ள அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக அனுபவமிக்க வீரர்களான ஜெஸ்பிரிட் பும்ரா மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோருடன் அர்ஸ்டீப் சிங் உள்வாங்கப்பட்டுள்ளார். மேலும் சுழல்பந்து வீச்சாளர்களான சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் 15 வீரர்கள் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலதீகமான சுப்மன் கில், ரிங்கு சிங் , கலீல் அஹமட் மற்றும் அவேஸ்கான் ஆகியோர் மேலதீக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)