உள்நாடு

அபெக்ஸ் கெம்பஸ் பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளர்களுக்கும் கெளரவம்..!

வெள்ளவத்தையில் உள்ள அபெக்ஸ் கெம்பஸ் பட்டமளிப்பு விழா நேற்று 29 திங்கற்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு பிரதான மண்டபத்தில் அபெக்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைவர் எம். எஸ்.இர்சாத் தலைமையில் நடைபெற்றது.

இப் பல்கலைக்கழகத்தின் கிளைகள் அநுராதபுரம், கண்டி, புத்தளம், காலி, பதுளை பிரதேசத்தில் உள்ள இப் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் கற்று வருகின்றனர். தொழில் புரிவோர்கள் மற்றும் பாடசாலைக் கல்வியை விட்டு விலகிய உயர்தரம் சித்தியெய்திய மாணவர்களுக்கும் தமது உயர்தர பட்டப் படிப்பினை மேற்கொள்வதற்காக வழி வகுத்துள்ளது

இப் பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபா பிரதம அதிதியாக் கலந்து கொண்டு பட்டங்களை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வைத்தார்கள்..

இந் நிகழ்வில் தென்ஆபிரிக்காவின் இலங்கைக்கான துாதுவர் சன்டில் எட்வின் சால்க், பங்களதேஸ் நாட்டின் உயர் ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம், மற்றும் மாலைதீவு நாட்டின் பிரதித் துாதுவர் , மற்றும் அரச பல்கலைக்கழகங்களது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ,கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இங்கு கலை பட்டங்கள், விஞ்ஞானப்பட்டங்கள் கல்வி முதுமானிப் பட்டம், வர்த்தக முகாமைத்துவம், வர்த்தக முதுமாணி மற்றும் உயர் தர தேசிய டிப்ளோமா சான்றிதழ்களை 150க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்
அத்துடன் சிரேஷ்ட ஊடகவியாளர்கள் அழைத்து அவர்களுக்கு விசேட விருதுகளை வழங்கி அவர்களது ஊடக சேவையும் விருதும் இப் பல்கலைக்கழகத்தினால் வழங்கி வைத்தது.

வசந்தம் முகாமையாளர் இர்பான் மொஹமட், கொழும்பு டைம்ஸ் மற்றும் அரப் நியுஸ் சிரேஸ்ட ஆசிரியர் மொஹமட் ரசுல்டீன், ருபாவாஹினி தமிழ்ச் செய்தி ஆசிரியர் காசீம்பாவா.சியாம், உதயம் பத்திரிகை ஆசிரியர் மற்றும் சிரேஸ்ட ஊடகசியலாளர் என்.எம். அமீன், லேக் ஹவுஸ் நிசாம், வசந்தம் பிராந்திய செய்தியாளர் மற்றும் லேக் ஹவுஸ் பத்திரிகைகளின் செய்தியாளர் அஷ்ரப் ஏ சமத், மற்றும் சிங்கள, தமிழ் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்களது ஊடக சேவைகளையும் கௌரவித்து இப் பல்கலைக்கழகம் விருதுகளை வழங்கி வைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *