கொழும்பு நகரில் 13 மே தின கூட்டங்கள். – பாதுகாப்புக்கு 4000 பொலிஸார்.
உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் புதனன்று மே தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். இலங்கையில் கடந்த வருடங்களை இம்முறை மே தினம் களை கட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தல் அண்மித்துள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிப்பதற்கான ஒரு களமாக இம்முறை மே தினத்தை மிகவும் கோலாகலமாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பில் இம்முறை 13 மே தின கூட்டங்கள் நடைபெறவுள்ளன.இதில் ஆறு பிரதான கூட்டங்களே முக்கியத்துவம் பெறவுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி,மொட்டுக் கட்சி,சிரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன பாரியளவிலான பேரணிகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.
இதேவேளை இம்முறை கூட்டங்களின் போது கட்சித் தாவல்கள் இடம்பெறலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மே தின பாதுகாப்பு பணிகளுக்காக 4000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.