உலகம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பிக்கலாம்.அச்சத்தில் நெதன்யாகு. – மாணவர் போராட்டத்தால் புதுத் தலைவலி.

200 நாட்களையும் தாண்டி காசா மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இன அழிப்பு போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இன அழிப்பில் ஈடுபடும் இஸ்ரேல் இனி அழிப்பு செய்வதற்கு உதவிசெய்யும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முழு உலகிலும் பலஸ்தீனுக்கு சார்பாக எழுந்துள்ள ஆதரவு அலைக்கு அச்சப்படவும், சிந்திக்கவும் ஆரம்பித்துள்ளன.

சர்வதேச இராணுவ, பாதுகாப்பு தரப்புகளின் தகவல்களின்படி இஸ்ரேலிய மொசாட் எதிர்பார்க்காத அளவு அமெரிக்கா உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் காசாவுக்கு சார்பாக களம் குதித்துள்ளமை இஸ்ரேலில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசா போரில் இலக்குகளை அடையாமை, ஹமாஸ் பிடித்துச் சென்றவர்களை மீட்காமை, பொருளாதார வீழ்ச்சி, சர்வதேசத்தின் ஆதரவில் பின்னடைவு என தொடர் அடிகளை எதிர்கொண்ட இஸ்ரேலுக்கு பல்கலைக்கழகங்களில் நிகழ்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் சர்வதேச ரீதியில் மிகப்பெரும் பாதக நிலையை ஏற்படுத்திள்ளது.

நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனக்கு எதிராக எந்நேரமும், கைது உத்தரவை பிறப்பிக்கலாம் என இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அச்சமுற்றிருக்கையில், அவருக்கு பல்கலைக்கழக மாணவர் போராட்டம் மற்றுமொரு புதுத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், அந்தகையில் தொடர் தோல்விகளை அடுத்து இஸ்ரேல் தரப்பு தற்போது புது போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய தரவுகளை ஹமாஸுக்கு அனுப்பி வைத்துள்ளது. எனினும் இந்நத ஆக்கம் எழுதப்படும் வரை ஹமாஸிடமிருந்து அதுபற்றிய எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *