விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடர். வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து குழாம் அறிவிப்பு.

9ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடருக்கான கேன் வில்லியம்ஸன் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட நியூஸிலாந்துக் குழாம் இன்றை தினம் (29) அந்நாதட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத் தொடரில் பங்கேற்கும் 20 அணிகளில் முதல் அணியாக நியூஸிலாந்து அணி தமது குழாத்தினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடாத்தும் ஐசிசி இன் 9ஆவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இத் தொடரில் 20 அணிகள் களம் காண்கின்றது. அத்துடன் ஒரு குழுவில் 5 அணிகள் வீதம் 4 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உலகக்கிண்ண தொடருக்கான அணிகள் விபரம் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் நியூஸிலாந்து அணி தமது அணி விபரத்தை முதல் அணியாக அறிவித்துள்ளது. இதில் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரரான கேண் வில்லியம்ஸன் அணியின் தலைவரான நியூஸிலாந்து அணியை வழிநடாத்தவுள்ளார். அவரோடு அதிடடித் துடுப்பாட்ட வீரர்களான பின் அலென்இ சப்மேன், டெவோன் கென்வே, மிச்சல், பிலிப்ஸ் போன்றவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

பந்துவீச்சாளர்களான அனுபவமிக்க் ட்ரென் போல்ட், சௌதி, மேட் ஹென்றி, லுக்கி போர்கியூஸன் ஆகியோருடன் சுழற்பந்து வீநச்சாளர்களான சோடி ஒள்வாங்கப்பட்டுள்ளார். அத்துடன் சுழல்பந்து சகலதுறை வீரர்களான ப்ரேஸ்வெல், ருச்சின் ரவீந்திர , மிச்சல் சாண்னர் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் இத் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட அணியுடன் இத் தொடருக்கான புதிய சீருடையும் இன்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் நியூஸிலாந்து அணி தமது முதல் போட்டியில் ஆப்கான் அணியை எதிர்வரு; ஜுலை 7ஆம் திகதி சந்திக்கவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்)
ஃபின் ஆலன்
டிரென்ட் போல்ட்
மைக்கேல் பிரேஸ்வெல்
மார்க் சாப்மேன்
டெவோன் கான்வே
லாக்கி பெர்குசன்
மாட் ஹென்றி
டேரில் மிட்செல்
ஜிம்மி நீஷம்
கிளென் பிலிப்ஸ்
ரச்சின் ரவீந்திரா
மிட்செல் சான்ட்னர்
இஷ் சோதி
டிமி சவுத்

பயண இருப்பு: பென் சியர்ஸ்

 

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *