உள்நாடு

மக்கொனையில் நடைபெற்ற களுத்துறை மாவட்ட முஸ்லிம் முன்னணி கூட்டம்.

களுத்துறை மாவட்ட முஸ்லிம் முன்னணிகள் சம்மேளன கூட்டம் மக்கொனை இந்திரிலிகொடையில் உள்ள ஏ.எஸ்.எம்.பவுஸி ஹாஜியாரின் இல்லத்தில் மாவட்ட தலைவர் எம்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்றது.

தொழிலதிபர் அல்-ஹாஜ் பவ்ஸ் விசேட பேச்சாளராக கலந்து கொண்டார். சமூகத்தில் ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கில் பிரதேச பாடசாலை மாணவர்களை தெரிவு செய்து ஊடகச் செயலமர்வென்றை நடத்துதல் பற்றியும் பாடசாலைகளில் நிலவும் பலத்த ஆசிரியர் தடுப்பாடு தொடர்பில் மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குனத்திலக்கவை சந்திப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்கள் தத்தமது பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தேவைகள் குறித்தும் சுட்டிக்காட்டினர். பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர்,பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ‌.ஆர்.எம்.பதியுத்தீன், பாணந்துறை பிரதேச சபை முன்னாள் எதிர் கட்சித் தலைவர் தாஹிர் பாஸி,காதி நீதிபதி எம்.எல்.ஏ.எம்.அஹ்லா உட்பட பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *