தமிழ் சிங்கள புத்தாண்டில் கலாசார உணவு விழா…!
தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு 2024ம் ஆண்டு சிங்கள மொழி கற்கை நெறியினை பயிலும் உத்தியோகத்தர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார உணவு விழா பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இன்று (28) கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம கலந்து கொண்டார்.
மேலும் இங்கு கல்வி பயிலும் அரச உத்தியோகத்தர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாறப்பட்டது.
மேலும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொண்ணாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வருகை தந்த அதிதிகளுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மூவின மக்களின் ஒற்றுமையை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தலைமை உரையினை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் நிகழ்த்தியதோடு, அசர கரும மொழிகள் திணைக்களத்தின் வளவாளர் ஏ.எச்.நாசிக் அகமடின் உரையைத் தொடர்ந்து அதிதி உரையினை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(ஏ.எச்.எம்.ஹாரீஸ் – மத்திய முகாம் செய்தியாளர்)