ஈரான் ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டாத ஈரான் ஆதரவு அமைப்புக்கள்..!
கடந்த புதனன்று இலங்கைக்கு ஒருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஈரான் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரல் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் வெளிவிவகார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் 40 வருடங்களுக்கும் மேலாக புத்தளத்தில் ஈரானுக்கு ஆதரவாக இயங்கி வரும் இயக்கமொன்றின் உறுப்பினர்கள் ஈரான் ஜனாதிபதியை சந்திக்க கொழும்பு வந்து ஜனாதிபதி தங்கியிருந்த ஹில்டன் ஹோட்டல் வரை சென்றுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ. எம் இலியாஸ் தலைமையில் இக் குழுவினர் வருகை தந்திருந்தமையும், ஈரானுக்கு ஆதரவாகச் செயற்படும் அமைப்புக்களுக்கே ஈரான் ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.